Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/விநாடி கூட வீணாக்காதே!

விநாடி கூட வீணாக்காதே!

விநாடி கூட வீணாக்காதே!

விநாடி கூட வீணாக்காதே!

ADDED : டிச 30, 2012 12:12 PM


Google News
Latest Tamil News
* உடல்நலமும், மனவலிமையும் கிடைக்க பெற்றவர்கள் ஏழைகளுக்கு சேவை செய்வதைத் தங்கள் கடமையாகக் கொள்ள வேண்டும்.

* காலமே மிகவும் விலை உயர்ந்த பொருள். ஒரு விநாடியைக் கூட வீணடிக்காதீர். அது நம் வாழ்க்கையைப் பாதித்துவிடும்.

* ஆன்மிகப்பணி, போதனை, பிரார்த்தனை இவற்றுக்கும் அப்பால் உழைப்பால் புதியதோர் உலகத்தை நம்மால் உருவாக்கி விட முடியும்.

* பணம், பதவி, புகழ் எதுவும் நம்முடன் வருவது இல்லை. இவற்றை இறைவனிடம் அர்ப்பணியுங்கள்

* ஆணவத்தால் செருக்குடன் திரிபவர்கள் வாழ்வு இனிப்பதில்லை. பாவ வாழ்வு நடத்துபவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி நிலைப்பதில்லை.

* தர்மத்தைப் பற்றி மணிக்கணக்காகப் பேச முடியும். ஆனால், அதை வாழ்வில் கடைபிடிப்பது என்பது மிகவும் கடினமானது.

* வேதத்தை கரைத்துக் குடித்த பண்டிதன் என்று பேர் எடுக்கலாம். ஆனால், மனத் தூய்மை இல்லாவிட்டால் துளியும் நன்மை உண்டாகாது.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us